அ - வரிசை 116 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அடைக்கலம்புகுதல் | சரண்புகுதல். |
அடைக்கலாங்குருவி | ஊர்க்குருவி. |
அடைசீலை | காரச்சீலை, பாழ்ச்சீலை. |
அடைசொல் | அடைமொழி, விசேடணமொழி. |
அடைச்சி | உடுத்து. |
அடைச்சீட்டு | கிஸ்திரசீது. |
அடைச்சுதல் | மலர்சூட்டல். |
அடைதூண் | கடைதறி. |
அடைத்தது | இட்டகட்டளை. |
அடைந்தோர் | உறவோர். |
அடைமாங்காய் | மாங்காயூறுகாய். |
அடைவிகச்சோலம் | கஸ்தூரிமஞ்சள். |
அட்சசூலை | ஒருவியாதி. |
அட்சபாடனம் | திரைப்படல். |
அட்சமாலை | அக்கமாலை. |
அட்சயதூணி | அருச்சுன னமபுக்கூடு. |
அட்சரகணிதம் | பீசகணிதம். |
அட்சரசனன் | இலேகணி. |
அட்சரசுதகம் | அக்கரசுதகம். |
அட்சரச்சுதகம் | அக்கரச்சுதகம். |