அ - வரிசை 115 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அடுக்காலாத்தி | அடுக்குத்தீபம். |
அடுக்குகை | அடுக்குதல். |
அடுக்குச்செவ்வரத்தை | அடுக்காக மலருள்ள செவ்வரத்தை. |
அடுக்குத்தீபம் | அடுக்குவிளக்கு. |
அடுக்குப்பார்த்தல் | ஒத்திகை பார்த்தல். |
அடுக்குமல்லிகை | ஒருமல்லிகை. |
அடுக்குமுள்ளி | ஒருபூண்டு, முள்ளி. |
அடுக்கூமத்தை | ஒருவகை யூமத்தை. |
அடுங்குன்றம் | யானை. |
அடுத்தார் | சேர்ந்தார். |
அடும்பு | அடப்பங்கொடி. |
அடைகட்டி | அடைமண். |
அடைகலம் | சேமக்கலம். |
அடைக்கரித்தல் | அடைகிடத்தல். |
அடைகுதல் | அடைதல். |
அடைகுறடு | கம்மப்பட்டடை. |
அடைக்கத்து | அடைகிடக்குங் கோழியிடுஞ் சத்தம். |
அடைக்கலக்குருவி | ஊர்க்குருவி. |
அடைக்கலங்குருவி | ஊர்க்குருவி |
அடைக்கலப்பொருள் | அடைக்கலமாகவைக்கப்பட்ட பொருள். |