அ - வரிசை 114 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அடிமைபூணல் | அடிமையாதல். |
அடிமைப்படல் | தொண்டுபூணுதல். |
அடிமைப்படுத்தல் | அடிமையாக்குதல். |
அடிமைப்பத்திரம் | தொண்டுச்சீட்டு. |
அடிம்பு | சிவதை. |
அடியவன் | அடிமையானவன். |
அடியறுக்கி | மட்கலமறுக்குங் கருவி. |
அடியான் | ஏவலாளன். |
அடியிடுதல் | தொடங்குதல். |
அடியீடு | ஆரம்பம். |
அடியுறை | பாதகாணிக்கை. |
அடிலவோடாகம் | ஒரு செடி. |
அடிவருடல் | கால்பிடித்தல். |
அடிவரையறை | அடியாறு. |
அடிவாறு | அடியாறு. |
அடிவீழ்ச்சி | வணங்குதல். |
அடிவீழ்தல் | வணக்கம். |
அடிவெண்குருத்து | முருந்து. |
அடுகளம் | போர்க்களம். |
அடுகுறல் | கொல்லுதல். |