அ - வரிசை 113 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அடித்திகம் | அசுவகந்தி. |
அடிநா | நாவினடி. |
அடிநிலம் | அடிப்பக்கம், அடியிடம். |
அடிபெயர்தல் | விலகுதல். |
அடிப்படுதல் | அமைதல். |
அடிப்படுத்துதல் | கீழமைத்தல். |
அடிப்பட்டசாந்தி | மகாசாந்தம். |
அடிப்பட்டவன் | பழகினவன். |
அடிப்பாடு | பழக்கம், வழி. |
அடிப்பிடித்தல் | அடிப்பற்றுதல். |
அடிப்பிடித்தல் | உணவு சமைக்கும் போது அதிக வெப்பத்தினால் அல்லது நீர் தன்மை இல்லாமையினால் சமைக்கும் உணவு பாத்திரத்துடன் ஒட்டிக் கருகிபோதல் |
அடிமடி | உள்மடி. |
அடிமடை | உள்மடை. |
அடிமயக்கு | பாதமயக்கு. |
அடிமறிமண்டிலம் | அகவற்பாக்களுள்ஒன்று. |
அடிமறிமண்டில வாசிரியம் | அடிமறிமண்டில மென்னும் வகைப்பட்டஆசிரியப்பா. |
அடிமறிமாற்று | பொருள்கோள் எட்டினுள் ஒன்று. |
அடிமுகனை | துவக்கம். |
அடிமுதன்மடக்கு | ஆதி மடக்கென்னுஞ் சொல்லலங்காரம். |
அடிமைகொள்ளல் | அடமையாக்கல். |