அ - வரிசை 112 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அடலைமுடலை

வீண்வார்த்தை.

அடவிகன்

வனவாசி.

அடவிக்கச்சோலம்

ஒருசரக்கு.

அடவிசரர்

வேடர்.

அடவிச்சொல்

கோரோசனை.

அடவியீ

ஒருவகைக்கீடம்.

அடாதது

தகாதது.

அடிகாற்று

பெருங்காற்று.

அடிகொள்ளல்

தொடங்கல்.

அடிக்கணை

கணைக்கால்.

அடிக்கீழ்ப்படுத்தல்

அடக்கி நடத்தல்,ஆண்டு கொள்ளல்.

அடிக்குடி

அடிச்சேரி.

அடிக்குள்

உடனே
மிகுவிரைவில்
ஓரடிக்குள்ளே வா (Loc.)

அடிக்கோலுதல்

இடம்பிடித்தல்.

அடிச்சி

அடியாள்.

அடிச்சூடு

காலடியிற்சுடுதல்.

அடிச்சேரி

அடிக்குடில், கிராமம்.

அடிஞானம்

சிவஞானம்.

அடிதல்

அடிபடுதல்.

அடித்தழும்பு

கார்சுவடு.