அ - வரிசை 111 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அஞ்ஞாதம் | அக்கியாதம். |
அஞ்ஞானப்பாறை | கருங்கற்பாறை. |
அஞ்ஞான்று | அப்போது. |
அடங்கம் | கடுகுரோகிணி. |
அடங்கலர் | பகைவர். |
அடங்கலார் | பகைவர். |
அடங்காதோர் | பகைவர். |
அடங்கார் | பகைவர். |
அடங்கிடம் | அழிந்தொடுங்குமிடம். |
அடந்தை | ஒருதாளம். |
அடப்பங்கொடி | அடம்பங்கொடி. |
அடப்பிரதீபிகை | அடயோகத்தைவிவரிக்கும் ஒரு வடநூல். |
அடம்பங்கொடி | ஒருபூக்கொடி. |
அடரார் | பகைவர். |
அடரொலி | அதட்டல். |
அடர்ச்சி | நெருக்கம். |
அடர்ந்தேற்றம் | கொடுமை, நெருக்கிடை. |
அடர்ந்தேற்றி | இட்டேற்றம், நெருக்கம். |
அடர்ப்பம் | நெருக்கம். |
அடலி | வெள்ளாட்டி. |