அ - வரிசை 11 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அசை | சுருட்டிய பாய், விறகு முதலியவற்றை வைக்கவென சிறிய இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் ஊஞ்சல் போல வளைத்துக் கட்டப்பட்டதொரு அமைப்பு |
அசைந்துகொடு | விட்டுக்கொடுத்தல் |
அசைபோடு | (மாடு மான் போன்ற சில விலங்கினம்)இரைப்பையில் இருந்து உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து தொடர்ந்து மெல்லுதல் |
அசையாச் சொத்து | வீடு நிலம் போன்ற சொத்து |
அசையும் சொத்து | (ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய) பணம்,நகை,இயந்திரம் போன்ற சொத்து |
அசைவம் | இறைச்சி,மீன் முதலிய உணவு வகை |
அசைவு | முன்னும் பின்னுமோ பக்கவாட்டிலோ உண்டாகும் லேசான இயக்கம்,காவடி |
அசோகச் சக்கரம் | இந்தியத் தேசியக் கொடியில் இடம்பெற்றிருக்கும் சக்கரம் |
அசௌக்கியம் | நலமின்மை,சுகவீனம் |
அசௌகரியம் | வசதிகுறைவு |
அஞ்சல் | கடிதம் |
அஞ்சல் அட்டை | அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கடிதம் எழுதும் அட்டை |
அஞ்சல் அலுவலகம் | அஞ்சல் நிலையம் |
அஞ்சல் ஆணை | ஓர் அஞ்சல் நிலையத்தில் செலுத்திய பணத்தை மற்றோர் அஞ்சல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளத்தரும் மதிப்புச் சீட்டு |
அஞ்சல் உறை | கடிதம் அனுப்புவதற்கான காகித உறை |
அஞ்சல் எழுத்தர் | கடிதங்களை அனுப்புவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியர் |
அஞ்சல் குறியீட்டு எண் | நாட்டிலுள்ள எல்லா ஊர்களுக்கும் குறிப்பிட்ட முறைப்படி அஞ்சல் துறை வழங்கியிருக்கும் எண் |
அஞ்சல் தலை | கடிதப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும்,அஞ்சல் நிலையம் விற்கும் கட்டண வில்லை |
அஞ்சல் நிலையம் | அஞ்சல் தலை,அஞ்சல் அட்டை விற்பது அஞ்சல்களைப் பெற்று உரிய முகவரிக்கு அனுப்புவது,பணச் சேமிப்பு வசதி ஏற்படுத்தித் தருவது போன்ற செயல்களைச் செய்யும் ஓர் அலுவலகம் |
அஞ்சல்வழிக் கல்வி | பாடங்களை அஞ்சலின் மூலம் பெற்றுப் படிக்கும் படிப்பு |