அ - வரிசை 108 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அசோகாரி

கடம்பமரம்.

அசௌந்தரியம்

அவலக்ஷணம்.

அச்சக்குறிப்பு

பயப்பாட்டுக்குறி.

அச்சடியன்

ஒருவகைச் சாயப்புடவை.

அச்சப்பல்லாம்

கரடி.

அச்சமுள்ளோன்

பயமுடையோன்.

அச்சயனம்

கடவுள்.

அச்சரசு

அப்சரஸ்திரீ.

அச்சவபிநயம்

அச்சச்சுவையபிநயம்.

அச்சனார்

கடவுள்.

அச்சானம்

அஞ்ஞானம்.

அச்சித்தினை

ஒருபுல், தினை.

அச்சுதன்முன்வந்தோன்

பலபத்திரன்.

அச்சுருவாணி

தேரகத்திற்செறிகதிர்.

அச்சுவசாத்திரம்

அஸ்வசாத்திரம்.

அச்சுவதி

அச்சுவினி நாள்.

அச்சுவத்தாமன்

அசுவத்தரமா.

அச்சுவமேதம்

அசுவமேதயாகம்.

அச்சுவினிநாள்

அசுபதி.

அச்சுவினிபுத்திரர்

தேவமருத்துவர்.