அ - வரிசை 107 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அசுவீகாரம் | அங்கீகரியாமை. |
அசேட்டை | சேட்டையின்மை. |
அசைஇயது | கிடந்தது. |
அசைசை | அசைவு, ஐயம். |
அசைச்சொல் | அசைநிறைக்குஞ் சொல் |
அசைதன்னியரூபம் | சடரூபம். |
அசைத்த | கட்டிய. |
அசைநிலை | அசைச்சொல். |
அசைநிலையளபெடை | அசை கோடற்பொருட்டுகொண்ட அளபெடை. |
அசைநிலையோகாரம் | ஈற்றசையோகாரம். (உ.ம்.) கேண்மினோ. |
அசைபோடல் | இரைமீட்டல். |
அசைப்பருங்கல் | மலை. |
அசையாமை | சலனமின்மை. |
அசையிடல் | அசைபோடல். |
அசையு | அமுக்கிரா. |
அசைவாடுதல் | அசைதல் உலாவுதல். |
அசைவின்மை | முயற்சி. |
அசைவுதீர்த்தல் | இளைப்பாறுதல். |
அசோகத்தளிர்மனி | சௌகந்திகப் பதுமராகமணி. |
அசோகவனிகை | அசோகமரச்சோலை. |