அ - வரிசை 106 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அசுவகெந்தி

அமுக்குரவு.

அசுவகோட்டம்

குதிரைச்சாலை.

அசுவசாந்திரம்

அசுவபரீட்சை நூல்.

அசுவசாந்தி

ஒரு யாகம்.

அசுவசாவம்

குதிரைக்குட்டி.

அசுவதரம்

ஆண்கோவேறுகழுதை.

அசுவதரன்

ஒருநாகசிரேட்டன்.

அசுவதாட்டி

குதிரையின் வேகம்.

அசுவத்தம்

அத்திமரம், அரசமரம்.

அசுவநாயகன்

குதிரைகாப்போன்.

அசுவபரி

அலரி.

அசுவபாலன்

குதிரைப்பாகன்.

அசுவமேதம்

ஒரு வகை யாகம்.

அசுவவாகன்

குதிரைப்பாகன்.

அசுவவாதரோகம்

ஒருவகை வாதரோகம்.

அசுவாபரி

அலரி.

அசுவாமணக்கு

சிறுபூளை.

அசுவாரி

எருமை.

அசுவினி

அச்சுவினிநாள்.

அசுவினிதேவர்

அச்சுவினிதேவர்.