அ - வரிசை 105 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அசுபக்கிரகம் | ஒருநோய் |
அசுபதி | ஒருநாள். |
அசுபராசி | தீயவிடயவாதனை. |
அசுமந்தகம் | நாணற்பூண்டு. |
அசுமேதம் | அசுவமேதயாகம். |
அசும்பல் | இடையறாதொழுகல். |
அசும்புசெய்தல் | வழுக்குதல். |
அசுரகுரு | சுக்கிரன். |
அசுரசந்தி | இரணியவேளை. |
அசுரநாள் | மூலநாள். |
அசுரமந்திரி | சுக்கிரன். |
அசுரம் | அசுரமணம். |
அசுரரிபு | விட்டணு. |
அசுரேந்திரன் | தாரகாசுரனுடைய ஒருமகன். |
அசுரரை | இராசி, இருள், வேசி. |
அசுவகந்திச்சூரணம் | அமுக்கிராக்கிழங்காற் செய்யப்பட்ட சூரணம். |
அசுவகந்திபலாலட்சாதைலம் | ஒருவகைத் தைலம். |
அசுவகந்தை | அமுக்கிராப்பூண்டு. |
அசுவகிரந்தம் | ஒருபறவை. |
அசுவகினி | அச்சுவினி. |