அ - வரிசை 104 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அசிவயோகி | சிவயோகியல்லாதவன். |
அசினயோனி | மான். |
அசீதம் | எண்பதாவது, உட்டணம். |
அசீரணபேதி | ஒருபேதி. |
அசீரணவாயு | ஒருவாயு. |
அசீரியம் | அழியாதது. |
அசீர்த்தி | அசீரணம். |
அசீவனி | மரணம். |
அசுகிருத்து | பகைவன். |
அசுகுசுப்பு | அருவருப்பு, சந்தேகம். |
அசுசிப்படல் | அழுக்கடைதல். |
அசுசிப்படுத்தல் | அழுக்காகுதல். |
அசுதாரணன் | சிவன். |
அசுத்ததத்துவங்கடொகுமுதல் | அசுத்தமாயை. |
அசுத்ததத்துவம் | ஆன்மதத்துவம். |
அசுத்தப்படல் | அழுக்காதல். |
அசுத்தப்படுத்தல் | அழுக்காக்குதல். |
அசுத்தமாயாக்கோபகர் | அனந்தேசுவரர். |
அசுந்தரம் | அடாமை, அவலட்சணம். |
அசுபக்கிரகம் | ஒருநோய். |