அ - வரிசை 103 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அசாதாரணகுணம் | விசேடகுணம். |
அசாதாரணலக்கணம் | சிறப்பிலக்கணம். |
அசாபலம் | அசைவின்மை. |
அசாபல்லியம் | உறுதி, திடம். |
அசாபாலகன் | ஆட்டுவாணிகன். |
அசாரதை | சாரமில்லாமை. |
அசாவதானம் | அவதானமின்மை. |
அசாவாமை | தளராமை. |
அசிதம்சம் | அசித்தின்கூறு. |
அசிதேகு | கத்தி, வாள். |
அசிதோபலம் | இந்திரநீலமணி. |
அசிதோற்பலம் | நீலோற்பலம். |
அசித்திரன் | கள்வன். |
அசித்துப்பொருள் | சடப்பொருள். |
அசிபத்திரவனம் | ஒருநரகம். |
அசிரநானம் | கண்டஸ்நானம். |
அசிரப்பிரபை | மின்னல். |
அசிரவணம் | செவிடு. |
அசிருபாடம் | கண்ணீர்சொரிதல். |
அசிர்க்கு | இரத்தம். |