அ - வரிசை 101 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அசதியாட்டல்

நகையாடச்செய்தல்.

அசத்திலட்சணம்

அசம்பவம்.

அசத்துக்கள்

கீழோர், சிறியோர்.

அசநவேதி

சீரகம்.

அகநியேறு

இடியேறு.

அசந்தி

சந்தியின்மை.

அசந்தித்தம்

ஐயப்படாதது.

அசந்துட்டன்

மகிழ்ச்சியற்றவன்.

அசர்நிகிதம்

தூரமுள்ளது.

அசபாநலம்

அசபையாகிய அக்கினி.

அசபிண்டன்

சபிண்டனல்லாதவன்.

அசமபாணன்

மன்மதன்.

அசமருதம்

அத்தி.

அசம்பவாலங்காரம்

கூடாமையணி.

அசம்பாவனை

அறியக்கூடாமை.

அசம்பிரக்ஞாசமாதி

நிராலம்ப சிவயோகசமாதி.

அசம்பிரேட்சியம்

ஆராய்வின்மை.

அசம்பை

அசம்பி.

அசம்மதி

உடன்பாடின்மை.

அசம்மானம்

அவமரியாதை.