அ - வரிசை 100 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அசகத்து

விடாதது.

அசகாயம்

சிநுகாயம்.

அசக்கல்

கட்டல்.

அசக்கீரம்

ஆட்டுப்பால்.

அசங்கச்சித்தன்

அஞ்ஞானமனத்தன்.

அசங்கதியலங்காரம்

தொடர்பின்மையணி.

அசங்கன்

அஞ்ஞானன், ஒட்டாதவன்.

அசங்கியா

எண்ணிறந்தது.

அசங்கியை

அசங்கியா.

அசங்குதல்

அசைதல்.

அசங்கோசம்

அடக்கமின்மை.

அசச்சனன்

துர்ச்சனன்.

அசஞ்சத்தி

சங்கற்பமறல்.

அசஞ்சயம்

ஐயமின்மை.

அசஞ்சலர்

அசைவற்றவர்.

அசடர்

கீழ்மக்கள்

அசட்டர்

களங்கமுடையவர்.

அசட்டி

அசமதாகம்.

அசதாசாரம்

துராசாரம்.

அசதிசன்னி

ஒருநோய்.