அ - வரிசை 10 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அசலூர்

அயலூர்,வெளியூர்

அசாத்தியம்

நடக்கமுடியாத
இயலாதது
சாத்தியம் அல்லாதது

அசாதாரணம்

வழக்கமானதில் இருந்து வேறுபட்டது,பொதுவானதை விடச் சிறப்பானது,சாதாரணத்திற்கு மேற்பட்டது,அரிது,அபூர்வமானது

அசிங்கப்படு

அவமானத்துக்கு உள்ளாதல்

அசிங்கப்படுத்து

(ஒருவரை) அவமானத்துக்கு உள்ளாக்குதல்

அசிங்கம்

தரக்குறைவு
மட்டம்
ஆபாசம்
அழகற்றது
அவமானம் தரத்தக்கது
கேவலமானது

அசிரத்தை

ஆர்வமின்மை,அக்கறையின்மை

அசுகை

சந்தடி
அறிகுறி

அசுத்த ஆவி

தீய ஆவி

அசுத்தம்

துப்புரவின்மை

அசுமாத்தம்

(இலங்)சந்தடி

அசுமாத்தம்

சிறு அறிகுறி

அசுர

மிகக் கடுமையான,மிகப் பெரிய

அசுரத்தனம்

மிகவும் தீவிரமான அல்லது மூர்க்கமான தன்மை

அசுர வைத்தியம்

மிகச் சாதாரணமான நோய்க்கு அளிக்கப்படும் கடுமையான சிகிச்சை

அசுரன்

(புராணங்களில்) தேவர்களின் பகைவர் குலம் ஒன்றைச் சேர்ந்தவன்,விரைந்து திறமையாகச் செயல்படுபவன், மது அருந்தாதவன்

அசுவாரசியம்

ஈடுபாடி இல்லாமை,அசிரத்தை

அசுவுணி

இலைகளினடிப்பகுதியிலும் குருத்துகளிலும் தளிர்களிலும் பச்சை,மஞ்சள்,கருப்பு நிறங்களில் கூட்டம்கூட்டமாகக் காணப்படும், செடியின் வளர்ச்சியைப் பாதிக்கும் மிகச் சிறிய பூச்சியினத்தின் பொதுப் பெயர்

அசூயை

பொறாமை

அசை

(மேலும் கீழும் அல்லது பக்கவாட்டில் மென்மையாக)ஆடுதல்,(யாப்பில்)எழுத்தை அடிப்படயாகக் கொண்டு அமைக்கப்பட்ட அலகு
வினைச் சொல்லாக வரும்போது அசைதல், நகர்தல் அல்லது விலகுதல் என்பதைக் குறிக்கும். பெயர்ச் சொல்லாகுமிடத்து ஒலியின் அல்லது ஓசையின் சிறு பிரிவைக் குறிக்கும். இது தமிழிலக்கணத்தில் முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்படுகிறது. வா ஓரசை உள்ள சொல். அ..வன் இரண்டு அசைகள் உள்ள சொல். ஆ..கட்...டும் மூன்று அசைகள் கொண்ட சொல். பொதுவாக எல்லா மொழிகளிகளிலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் எல்லாம் ஓரசை, ஈரசை சிலவேளைகளில் மூவசைச் சொற்களாகவே அமையும்.