அ - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அம்மா | பெற்றோரில் பெண் |
அந்தி | மாலை |
அக்கப்போர் | [முக்கியமற்ற] சிறு தகராறு |
அறம் | தனிமனிதனின் வாழ்வும் பொது வாழ்வும் சீராக இயங்கத் தனிமனிதன், அரசு போன்றவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தின் அடிபடையிலான நெறிமுறைகள் அல்லது கடமைகள் |
அ | அந்த, அகரம்,தமிழ் எழுத்தின் முதல் எழுத்து(சுட்டெழுத்து) |
அஃதாவது | அதாவது என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல் |
அஃது | அது |
அஃறிணை | மனிதர் அல்லாத பிற உயிர்களையும்,உயிரற்ற பொருட்களையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்பு |
அக்கக்காக | பகுதி பகுதியாக,தனித்தனியாக |
அக்கடா என்று | [வேலைக்குப் பிறகு] ஓய்வாக |
அக்கம்பக்கம் | [குறிப்பிட்ட இடத்தை] சுற்றியுள்ள பகுதி,சுற்றுமுற்றும் |
அக்கரை | வெளிநட்டுக்குரிய அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த |
அக்கரைச் சீமை | அயல்நாடு,வெளிநாடு |
அக்கறை | [ஒன்றில் அல்லது ஒருவர் மேல்] ஈடுபாடு |
அக்கா | உடன் பிறந்த பெண்களில்/உறவு முறயிலான சகோதரிகளில் தனக்கு மூத்தவள்,தமக்கை,அக்காள்,அக்கை |
அக்காக்குருவி | எளிதில் பார்க்க முடியாததாக,குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயில் இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை |
அக்காள் | முன்பிறந்தாள் |
அக்கி | [வைரஸ் கிருமி நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால்] அடையடையாக வேர்க்குருபோல் தோன்றிச் சிவந்து வலியை ஏற்படுத்தும் தோல் நோய் |
அக்கி எழுது | அக்கி வந்த இடத்தில் செம்மண் குழம்பைத் தடவுதல் |
அக்ரகாரம் | முன்பு பிராமணர்கள் மட்டுமே குடியிருந்த தெரு அல்லது தெருக்கள் |