அ - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
அறுதலி | கணவனை இழந்த பெண், பெண்ணை வையும் ஒரு முறை |
அறுந்த கதை | பொதுவாகத் தவிர்க்கப்பட வேண்டிய கேவலமான விடயங்களை பற்றிய பேச்சு |
அறுந்து போதல் | பொருளெல்லாம் இழந்து போதல் |
அறுந்து போவாள் | திட்டுதற் குறிப்பு |
அறுவாப் போவாள் | திட்டுதற் குறிப்பு |
அறுவாள் | நாசமாய் போவான் என்ற கருத்திலான திட்டுதற் குறிப்பு |
அறோட்டுமா | நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ஒரு வகை உணவு |
அன்ரி | சிறியதாய், பெண்ணொருவரை உறவுமுறைக்கப்பால் இன்னொருவர் அன்பாக அழைக்கும் முறை |
அன்ரிக்காறி | இன்னொருவரின் அன்ரியினை குறிக்கும் முறை |
அன்ன பரதேசம் | தூரப்பிரயாணம் |
அன்னமன்னாப் பழம் | சீத்தப் பழம் |
அனுங்குதல் | முனகுதல், மெதுவாக, வெளியில் விளங்காதவாறு பேசுதல், கொக்கான் வெட்டுதல் விளையாட்டில் தொடக்கூடாதது தொடப்படல் |
அடாத ஆட்டம் ஆடுதல் | மற்றவர்கள் வெறுக்குமளவுற்கு அளவுக்கதிகமாக செயற்படல் |